
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அயர்லாந்துக்கு எதிரான இந்த டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அணியின் கேப்டனாக ஜேக்கோப் பெத்தேல் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜோர்டான் காக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஜேக்கோப் பெத்தேல் (கேப்டன்), ரிஹான் அகமது, சோனி பேக்கர், டாம் பண்டான், ஜோஸ் பட்லர், லியம் டாஸன், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், சாக்யூப் மஹ்முத், ஜேமி ஓவர்டான், மாத்யூ பாட்ஸ், அடில் ரஷீத், பில் சால்ட், லூக் வுட் மற்றும் ஜோர்டான் காக்ஸ்.
There have been changes to the England squad for the T20 series against Ireland.
இதையும் படிக்க: பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.