
ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 13.1 ஓவர்களில் ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அலிஷான் ஷாராஃபு 22 ரன்கள், கேப்டன் முகமது வசீம் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அதன் பின், களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: உலகை வெல்லும் முன்பு ஆசியாவை வெல்வோம்: சூர்யகுமார் யாதவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.