
இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் மற்றும் 3 அதிகாரபூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (செப்டம்பர் 16) லக்னௌவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா ஏ தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் கேம்ப்பெல் கெல்லாவே களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 126 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேம்ப்பெல் கெல்லாவே 96 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
தேநீர் இடைவேளையின்போது, ஆஸ்திரேலியா ஏ அணி விக்கெட் இழப்பின்றி 198 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இதையும் படிக்க: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா மீண்டும் முதலிடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.