
பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி நேற்றிரவு யுஎஇ உடன் விளையாடியது.
இந்நிலையில், பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் நடுவரின் மன்னிப்பு விடியோ போலியானது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியபோது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவிடம் கைக் குலுக்க மறுத்துவிட்டார். இது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
இதனால், பிசிபி வாரியம் ஐசிசியிடம் நடுவர் குறித்து புகார் அளித்தது. ஆனால், ஐசிசி நடுவர் மீது எந்தத் தவறும் இல்லை எனக் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் அளித்த தகவலில் தெரியவந்தது.
இருப்பினும் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததுக்கு நடுவர் ஆன்டி பைகிராஃப்ட் பாகிஸ்தான் கேப்டன், பிசிபியிடம் மன்னிப்பு கேட்டதால் பாகிஸ்தான் அணி யுஎஇ உடன் விளையாட சம்மதித்ததாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறியது.
பிசிபி தனது எக்ஸ் பக்கத்தில் நடுவர் பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக விடியோ வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறினால் ரூ.16 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுமெனக் கூறப்பட்டது.
இந்நிலையில், நடுவரின் மன்னிப்பு விடியோ போலியானது எனவும் ஒரு தரப்பினர் கூறி வருவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பிசிபியின் எக்ஸ் தளம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சர்ச்சைக் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், “பகல்ஹாம் தாக்குதலுக்குப் பதிலடியாக எனது செயல் இருந்தது” எனக் கூறியிருந்தார்.
மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றில் மோதவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.