பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுடனான போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் கருத்து...
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்PTI
Published on
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை இனி ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 171 ரன்கள் குவித்த நிலையில், தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இலக்கை 19 வது ஓவரில் அடைந்து வெற்றி பெற்றது.

கடந்த லீக் போட்டியின் போது, ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்காமல் சென்றது சர்ச்சையான நிலையில், நேற்றைய ஆட்டத்துக்கு பிறகும் இந்திய அணியினர் கைக்குலுக்கவில்லை.

இந்த நிலையில், ஆட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சூர்யகுமார் யாதவ், இனிமேல் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று சிரித்தபடி கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:

”இனியும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரைவல்ரியாக நினைத்துக் கேள்வி கேட்பதை நிறுத்த வேண்டும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் ரைவல்ரி என்பது இரு அணிகள் 15 ஆட்டங்களில் விளையாடி, 8 - 7 என்ற வெற்றியை பதிவு செய்திருந்தால் ரைவல்ரி என்று அழைப்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால், 3-0, 10-1 என்ற வெற்றி கணக்கில் இருக்கும் இரு அணிகளை ரைவல்ரி என அழைப்பது சரியல்ல. இது வெறும் போட்டி மட்டும்தான்” எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ள நிலையில், இந்தியா 12 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.

Summary

Indian captain Suryakumar Yadav has said that the India-Pakistan match should no longer be called a 'rivalry'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com