/

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம் குறித்து...

News image

பாபர் அசாம். - படம்: ஏஎஃப்பி

Updated On :21 ஏப்ரல் 2026, 1:07 pm

டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஒரு டாட் பந்துடன் சதம் அடித்தவராக பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் பெஷாவர் ஜல்மி அணிக்கு கேப்டனாக இருக்கும் பாபர் அசாம் குவெட்டா கிளாட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தினார். டி20 போட்டிகளில் 783 நாள்களுக்குப் பிறகு, இந்தச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

பிஎஸ்எல் தொடரில் ஏப்.19ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டியில், பெஷாவர் ஜல்மி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 255/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய குவெட்டா கிளாட்டர்ஸ் அணி 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் பாபர் அசாம் 52 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். பாபர் அசாம் முன்னதாக, 2024 பிப்ரவரியில் சதம் அடித்திருந்தார். தற்போது, 783 நாள்களுக்குப் பிறகு சதம் அடித்துள்ளார்.

டி20 போட்டிகளில் பாபர் அசாம் 338 இன்னிங்ஸில் 12,000 ரன்களை கடந்துள்ளார். முன்னதாக, விராட் கோலி 360 இன்னிங்ஸ்களிலும் கிறிஸ் கெயில் 338 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்தார்கள்.

டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் 12 சதங்களுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார். கிறிஸ் கெயில் இந்தப் பட்டியலில் 22 சதங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நடப்பு பிஎஸ்எல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 12 ரன்களில் இரண்டாமிடம் வகித்துள்ளார். இந்த வெற்றியுடன் அவரது அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 50 பந்துகளுக்கு அதிகமாக விளையாடி சதமடித்தவர்கள் பட்டியலில் ஒரே ஒரு டாட் பந்து உடன் விளையாடியவராக பாபர் அசாம் சாதனை படைத்துள்ளார்.

Summary

Babar Azam Leaves Behind Virat Kohli, Chris Gayle. Scores Historic Century After 783 Days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.