கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஐபிஎல்: விராட் கோலியின் நீண்ட கால சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

Rohit sharma

ரோஹித் சர்மா (கோப்புப் படம்) - படம் | AP

Published On :

ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் நீண்ட கால சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும், 78 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள ரோஹித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 36 போட்டிகளில் 40.03 சராசரியுடன் 1161 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக ஒருவரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுவாகும். முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 36 போட்டிகளில் 1159 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ரோஹித் சர்மா 7124 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rohit Sharma has broken Virat Kohli's long-standing record in the IPL series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.