தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) நடப்பு சீசனில் நெல்லை ராயல் கிங்ஸ் 50 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
நடப்பு சீசனின் மூன்றாவது போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 204/6 ரன்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக அதீஷ் 41, ரித்திக் ஈஸ்வரன் 36, சோனி யாதவ் 35 ரன்கள் குவித்தார்கள். அபிஷேக், சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்து பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 17.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக அஸ்வந்த் வால்தப்பா 31, தினேஷ் ராஜ் 29, ஜெகதீசன் 27 ரன்கள் குவித்தார்கள்.
நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் சார்பாக என்எஸ் ஹரிஷ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ரோஹித், ராக்கி, சோனு தலா 2 விக்கெட்டுகளும் எடுத்து வெற்றிக்கு உதவினார்கள்.
நடப்பு சீசனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
Summary
Tamil Nadu Premier League Nellai Royal Kings won by 50 runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லிஸ் பந்துவீச, நெல்லை ராயல் கிங்ஸ் பேட்டிங்!

தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் தொடரும் 'ரூ' குறியீடு!

நெல்லையில் இருசக்கர வாகன ஓட்டியைத் தாக்கிய திமுகவினர்! வைரல் விடியோ

உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



