முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா துருவ் ஜுரெல்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர் துருவ் ஜுரெல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

News image

துருவ் ஜுரெல் - படம்: பிசிசிஐ

Updated On :13 ஆகஸ்ட் 2026, 5:45 pm IST

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய வீரர் துருவ் ஜுரெல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியா - இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 15) முதல் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தத் தொடருக்காக இந்தியா, இலங்கை இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இலங்கைக்கு எதிரான இந்த தொடருக்காக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர்களில் ஒருவரான துருவ் ஜுரெல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நீண்ட நேரம் ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்டதுடன், வேகப் பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் பயிற்சியும் மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரெல் சதம் விளாசினார். அதன் பின், அவர் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 44, 6, 14, 13, 0, 2, 19 ரன்கள் முறையே எடுத்தார். இந்த 7 இன்னிங்ஸ்களில் ஐந்து இன்னிங்ஸ்களில் அவர் சுழற்பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டினை பறிகொடுத்தார்.

இந்த சூழலில்தான், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளார். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடவுள்ளதால், துருவ் ஜுரெல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், அணியில் விக்கெட் கீப்பருக்கு முதல் தெரிவாக ரிஷப் பந்த் உள்ளார். சாய் சுதர்சனுக்குப் பதிலாக அணியில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளதால், ஜுரெல் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். சர்ஃபராஸ் கான் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடக் கூடியவர். அவர் வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடுபவர். அதனால், துருவ் ஜுரெல் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், அவருக்கான அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

அணியின் முதல் விக்கெட் கீப்பர் தெரிவாக ரிஷப் பந்த் இருப்பதால், தனக்கு கிடைக்கும் வாய்ப்பை ஒரு பேட்டராக நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஜுரெல் ரன்கள் குவிக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனக்கான இடத்தை ஜுரெல் உறுதிசெய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary

Indian player Dhruv Jurel is undergoing rigorous training for the Test series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.