டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணி பற்றி...
ஆயுஷ் பதோனி
ஆயுஷ் பதோனி
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆயுஷ் பதோனி தலைமையிலான ஏ அணியில், டி20 உலகக் கோப்பையில் விளையாடவிருக்கும் திலக் வர்மா மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இன்றுமுதல் உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஏ அணி

ஆயுஷ் பதோனி (கேப்டன்), அசோக் சர்மா, நமன் தீர், உர்வில் படேல் (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் ஷர்மா, பிரியன்ஷ் ஆர்யா, ஜெகதீசன், திலக் வர்மா, ரியான் பராக், மனவ் சுதர், குர்ஜப்னீத் சிங், விப்ராஜ் நிகம், ரவி பிஷ்னாய், கலீல் அகமது, மயங்க் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com