19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக 55 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
பேட்டிங்கில் மிரட்டிய சூர்யவன்ஷி! இறுதிப்போட்டியில் சிக்ஸர் மழை!
பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வரும் இந்திய அணி 23 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்து அபாரமாக விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி சிக்ஸர்களாக விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 55 பந்துகளில் சதம் விளாசி, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் அதிவேக சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வைபவ் சூர்யவன்ஷியுடன் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 51 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் அதிரடியாக 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் அடங்கும்.
Summary
In the Under-19 World Cup final, Vaibhav Suryavanshi impressed by smashing a century off just 55 balls.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோபிக்காத ரொனால்டோ: போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி அளித்த காங்கோ!

அறிமுக உலகக் கோப்பையில் அசத்திய எர்லிங் ஹாலண்ட்..! முதலிடத்தில் நார்வே அணி!
மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




