டி20 உலகக் கோப்பையில் அயர்லாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த உலகக் கோப்பையில் தனது முதல் வெற்றியை அயர்லாந்து அணி மிகப்பெரிய வெற்றியாக மாற்றியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணியின் கேப்டன் ஜதீங்கர் சிங் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, 20 ஓவர்களில் அயர்லாந்து அணி 235/5 ரன்கள் எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணியின் கேப்டன் லார்கன் டக்கெர் 51 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கரேத் டெலானி 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, கடைசியில் வந்த ஜார்ஜ் டாக்ரெல் 9 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அடுத்து விளையாடிய ஓமன் 18 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஆமிர் கலீம் 50 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் அயர்லாந்து அணியினர் ஜோஷுவா லிட்டில் 3, மேத்யூ ஹம்ப்ரிஸ், மெக்கார்த்தி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
ஆட்ட நாயகன் விருது அயர்லாந்து அணியின் கேப்டன் லார்கன் டக்கெருக்கு வழங்கப்பட்டது.
Summary
Ireland defeated Oman by 96 runs in a thrilling T20 World Cup match.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அபார வெற்றியுடன் முதலிடத்தில் குஜராத்!

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




