2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இங்கிலாந்துக்கு இரண்டாவது வெற்றி; புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
- படம் | AP
Updated On :14 பிப்ரவரி 2026, 1:55 pm

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 19.4 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் கேப்டன் ரிச்சி பெர்ரிங்டான் அதிகபட்சமாக 32 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, மைக்கேல் ஜோன்ஸ் 33 ரன்களும், டாம் ப்ரூஸ் 24 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் லியம் டாஸன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜேமி ஓவர்டான் மற்றும் சாம் கரண் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இங்கிலாந்துக்கு 2-வது வெற்றி!

153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 2 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ஜேக்கோப் பெத்தேல் மற்றும் டாம் பாண்டன் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஜேக்கோப் பெத்தேல் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் பாண்டன் 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். சாம் கரண் 20 பந்துகளில் 28 ரன்களும், வில் ஜாக்ஸ் 10 பந்துகளில் 16 ரன்களும் எடுத்தனர்.

ஸ்காட்லாந்து தரப்பில் பிரண்டன் மெக்முல்லன், பிராட் கர்ரி, பிராட் வீல், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஆலிவர் டேவிட்சன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி, 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் குரூப் சி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.