தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

சூப்பர் 8: எந்த அணிகள் எங்கெங்கு விளையாடுகின்றன? இந்தியாவுக்கான போட்டி விவரங்கள்!

டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள சூப்பர் 8 அணிகளின் போட்டிகள் குறித்து...

Captains of the teams selected for the Super 8 round.

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வான அணிகளின் கேப்டன்கள். - படம்: ஐசிசி

Published On :

டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள சூப்பர் 8 அணிகளுக்கான போட்டிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் 8 போட்டிகள் இந்தியாவிலும் இலங்கையிலுமாக பிப்.21 முதல் மார்ச்.1ஆம் தேதி வரை மொத்தம் 12 போட்டிகளாக நடைபெறுகின்றன.

சூப்பர் 8 சுற்றுக்குத் தேர்வாகியுள்ள அணிகள் குரூப் 1, குரூப் 1 எனப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இருக்கின்றன.

குரூப் 1 அணிகள் தங்களது போட்டிகளை இந்தியாவிலும் குரூப் 2 அணிகள் தங்களது போட்டிகளை இலங்கையிலும் விளையாடுகின்றன.

குரூப் 1: இந்தியா, ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்.

குரூப் 2: இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து.

ஒவ்வொரு அணியும் தங்களது குரூப்பில் உள்ள அணிகளுடன் ஒருமுறை விளையாடும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் தலா 3 போட்டிகளில் விளையாடுகின்றன.

இறுதியில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். அந்த நான்கு அணிகளில் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட இருக்கின்றன.

இந்திய அணிக்கான விவரங்கள்

  • முதல் போட்டியில் (பிப்.22) தெ.ஆ. உடன் அகமதாபாதில் மோதுகிறது.

  • இரண்டாவது போட்டியில் (பிப்.26) ஜிம்பாப்வே உடன் சென்னையில் மோதுகிறது.

  • மூன்றாவது போட்டியில் (மார்ச்.1) மே.இ.தீ. அணியுடன் கொல்கத்தாவில் மோதுகிறது.

Summary

The details of the matches for the Super 8 teams that have been selected for the T20 World Cup have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.