

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மோதும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
மழையின் காரணமாக இந்தப் போட்டி 45 ஓவர்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், யூதா்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களுக்காக கடந்த டிச.14ஆம் தேதி ஏராளமானோா் கூடியிருந்தனா்.
அப்போது 2 பயங்கரவாதிகள் நடத்திய மோசமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பயங்கரவாதிகளில் ஒருவா் உள்பட மொத்தம் 16 போ் உயிரிழந்தனா்.
இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள் வரவழைக்கப்பட்டு சிட்னி திடலில் மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 211/3 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியை ஜோ ரூட் - ஹாரி புரூக் கூட்டணி 211 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
ஜோ ரூட் 72, ஹாரி புரூக் 78 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள்.
ஆஸி. சார்பில் ஸ்டார்க், போலண்ட், மைக்கேல் நெசீர் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.