

சிட்னி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 567 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி சிட்னி திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 97.3 ஓவர்களில் 384 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 124 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 518 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 15 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 129 ரன்களுடனும், பியூ வெப்ஸ்டர் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், கேப்டன் ஸ்மித் 16 பௌண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 138 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அடுத்துவந்த ஸ்டார்க் 5 ரன்களிலும், ஸ்காட் போலாண்ட் ரன் ஏதுமின்றியும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 133.5 ஓவர்களில் 567 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கடைசிவரை களத்தில் இருந்து ஐந்தாவது அரைசதம் கடந்த பியூ வெப்ஸ்டர் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணித் தரப்பில், பிரைடன் கார்ஸ், ஜோஸ் டக் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளும், பெத்தேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம், ஆஸ்திரேலியா 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.