முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!

முதல் டி20யில் பாகிஸ்தான் அபார வெற்றி!
முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!
AP
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவை தன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

லாகூரில் இன்று(ஜன. 29) நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து, 168 ரன்கள் திரட்டியது. இதையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் மேத்யூ ஷார்ட் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் டிராவிஸ் ஹெட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அணியின் ஸ்கோர் வேகம் நிலைகுலையத் தொடங்கியது.

இந்த நிலையில், டெயிலண்டராகக் களமிறங்கிய சேவியர் பர்லெட் இறுதியில் நிலைத்து நின்று ஆடியதால், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற நூலிழை வாய்ப்பு தென்பட்டது. எனினும், கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயமாயிற்று.

அந்த ஓவரை வீசிய, சல்மான் மிர்ஸாவின் முதல் பந்தை எதிர்கொண்ட சேவியர் பர்லெட், அதை சிக்ஸருக்குப் பறக்கவிட்டதும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் குஷியாகினர்.

சுதாரித்துக்கொண்ட சல்மான் மிர்ஸா, அடுத்த பந்தை ஃபுல் அவுட்சைட் ஆஃப் திசையில் வீச, அதைத் தொட முடியாமல் கோட்டை விட்டார் சேவியர் பர்லெட். ஆக மொத்தம், அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே சேர்ந்ததால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

Summary

Pakistan vs Australia, 1st T20I Pakistan won by 22 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com