நூற்றாண்டு சாதனைப் பட்டியலில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!

ஆஷஸ் தொடரில் மிட்செல் ஸ்டார்க் நிகழ்த்திய சாதனை குறித்து...
Australia captain Steve Smith, left, talks to teammate Mitchell Starc during play on day two of the fifth and final Ashes cricket test between England and Australia in Sydney
ஸ்டீவ் ஸ்மித் (இடது), மிட்செல் ஸ்டார்க் (வலது). படம்: ஏபி
Updated on
1 min read

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நூற்றாண்டில் ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் மிட்செல் ஸ்டார்க் இணைந்துள்ளார்.

ஆஷஸ் 2025-26 தொடரினை ஆஸ்திரேலியா 4- 1 என வென்றது. இந்தத் தொடரில் மிட்செல் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருது வென்றார்.

பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 156 ரன்கள் எடுத்து அணிக்கு மிகவும் உதவியாக இருந்தார்.

இதன்மூலம், தொடரில் சிறப்பாக செயல்பட்ட மிட்செல் ஸ்டார்க்கிற்கு முதல்முறையாக காம்டன் - மில்லர் விருது வழங்கப்பட்டது.

இந்த சாதனை மட்டுமில்லாமல் இந்த நூற்றாண்டில் ஆஷஸ் தொடரில் 30-க்கும் அதிகமான விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலிலும் இணைந்துள்ளார்.

இந்த நூற்றாண்டில் ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள்

1. ஷேன் வார்னே - 40 (2005)

2. மிட்செல் ஜான்சன் - 37 (2013-14)

3. க்ளென் மெக்ராத் - 32 (2001)

4. ஷேன் வார்னே - 31 (2001)

5. மிட்செல் ஸ்டார்க் - 31 (2025-26)

Summary

Australian fast bowler Mitchell Starc has set a new record in the Ashes series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com