

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் டெஸ்ட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 384 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக, ஆஸி. தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 518/7 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்கள்.
ஸ்டீவ் ஸ்மித் தனது 37-ஆவது டெஸ்ட் சதத்தினை நிறைவு செய்தார். இதன்மூலம் ராகுல் திராவிட் சாதனையை முறியடித்துள்ளார்.
ஆஷஸ் தொடரில் மட்டுமே 3,682 ரன்கள் அடித்துள்ள ஸ்டீவ் ஸ்மித், 13 சதங்களையும் நிறைவு செய்துள்ளார்.
இதன்மூலம் 96 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஜாக் ஹோப்ஸ் 3636, 12 சதங்கள் அடித்திருந்தார்.
ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள்
1. டான் பிராட்மேன் - 19
2. ஸ்டீவ் ஸ்மித் - 13
3. ஜாக் ஹோப்ஸ் - 12
4. ஜோ ரூட் - 6
ஆஷஸ் தொடரில் அதிக ரன்கள்
1. டான் பிராட்மேன் - 5028
2. ஸ்டீவ் ஸ்மித் - 3682
3. ஜாக் ஹோப்ஸ் - 3636
4. ஆலன் பார்டர் - 3222
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.