

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஆறு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வதோராவில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் போகப்போக ஈரப்பதம் வரும் என்பதால் பந்துவீச்சைத் தேர்வு செய்ததாக அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டியளித்தார்.
குல்தீ, சிராஜ், பிரசித், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன், ஜடேஜா என ஆறு பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இருவரும் ஆல் ரவுண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.