

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக அர்ஷதீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார் என கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
மூன்றாவது போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
நியூசிலாந்து: டெவான் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், வில் யங், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் ஹே (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஜகரி ஃபோல்க்ஸ், கைல் ஜேமிசன், கிறிஸ்டியன் கிளார்க், ஜெய்டன் லெனாக்ஸ்
இந்தியா: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.