

ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு (22 வயது) மராத்திய திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக்கில் ஃபோப் லிட்ச்ஃபீல்டு யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
மகளிர் பிரீமியர் லீக்கில் யுபி வாரியர்ஸ் அணி மும்பையை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த அணியின் நட்சத்திர வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு இந்தப் போட்டியில் 61 ரன்கள் எடுத்து அசத்தினார்.
போட்டிக்குப் பிறகு, லிட்ச்ஃபீல்டு சைராத் எனும் மராத்திய பட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்த விடியோவை யுபி வாரியர்ஸ் அணி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விடியோ மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
சைராத் திரைப்படம்
நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியன மராத்திய திரைப்படம்தான் சைராத். இந்தப் படத்தில் ரிங்கு ராஜ்குரு, ஆகாஷ் தோஷர் நடித்திருப்பார்கள்.
மராத்தியில் முதல்முறையாக ரூ.100 கோடி வசூலித்த திரைப்படமாக சைராத் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சாதிய தீண்டாமைகளைக் குறித்து பதிவிட்ட இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அஜய் அடுல் இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
நாகராஜ் மஞ்சுளே தற்போது பயோபிக் ஒன்றினை இயக்கி வருகிறார். விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.