

மகளிர் பிரீமியர் லீக்கில் இருந்து இளம் ஆஸ்திரேலிய வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
இவருக்குப் பதிலாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டர் அமி ஜோன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
22 வயதாகும் ஃபோப் லிட்ச்ஃபீல்டு யுபி வாரியஸ் அணியில் விளையாடி வந்தார். இந்தத் தொடரில் 150க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர் 243 ரன்கள் குவித்துள்ளார்.
பிப்.15ஆம் தேதி இந்தியாவுடன் பல்வேறு தொடர்கள் நடைபெற இருப்பதால் அதில் பங்கேற்க தயாராக ஆஸி.க்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் யுபி வாரியஸ் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இரண்டு போட்டிகளில் வெற்றி பெறுவதை விடவும் நல்ல ரன் ரேட் வித்தியாசத்திலும் வென்றால்தான் யுபி வாரியஸ் அணியினால் பிளே ஆஃப்க்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை இரவு ஆர்சிபியுடன் யுபி வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அலீஸா ஹீலிக்குப் பிறகு யாரைக் கேப்டனாக்குவது என்ற விவாதத்தில் இவரது பெயரும் இருக்கிறது.
இருப்பினும் சோஃபி மோலினக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸி. ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.