

யு19 உலகக் கோப்பை: சூப்பர் சிக்ஸ் குரூப் 1 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸி. அணியின் கேப்டன் ஆலிவர் பீக் சதமடித்து அசத்தினார்.
யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீ. அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணி 314/7 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ஆலிவர் பீக்கி 108 ரன்களும், நிதீஷ் சாமுவேல் 56 ரன்களும் வில் மலாஜ்சுக் 48 ரன்களும் எடுத்தார்கள்.
மே.இ.தீ. அணிகள் ஜகீம் பெல்லார்டு ஜெய் கிட்டன்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
குரூப் 1 புள்ளிப் பட்டியலில் ஆஸி. அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மே.இ.தீ. 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.