

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்க அணிக்கு சிறிது அதிர்ஷ்டம் வேண்டுமென அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது. தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பையை வெல்ல தென்னாப்பிரிக்க அணிக்கு சிறிது அதிர்ஷ்டம் வேண்டுமென அந்த அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி நன்றாக விளையாடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. டி20 உலகக் கோப்பையை வெல்ல அவர்களுக்கு சிறிது அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. இந்த முறை டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, கனடாவை எதிர்த்து விளையாடவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.