

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதைத் தொடர்ந்து மற்றொரு வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தில் ஆர்சிபி களமிறங்கியுள்ளது.
மெக் லானிங் தலைமையிலான உ.பி. வாரியன்ஸ் அணி இதற்கு முந்தைய போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸிடம் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுடன் இந்தத் தொடரை தொடங்கியுள்ளது. இதனால், இம்முறை வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நவி மும்பையில் இன்று (ஜன.12) நடைபெற்ற 5 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - உ.பி. வாரியஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து உ.பி. வாரியர்ஸ் அணியில் கேப்டன் மெக் லானிங், ஹர்லீன் தியோல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.