

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அஃப்ரிடி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய அதே அணியுடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. அணியில் புதிதாக ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் பாபர் அசாம் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஷாகின் ஷா அஃப்ரிடி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிக் பாஷ் லீக் தொடரில் சோபிக்காத பாபர் அசாமும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்காக பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்
சல்மான் அலி அகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபாஹீம் அஷரஃப், ஃபகர் ஸமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, முகமது வாசிம், நசீம் ஷா, ஷாகிப்ஸதா ஃபர்ஹான், சைம் ஆயுப், ஷாகின் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான் மற்றும் உஸ்மான் டாரிக்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.