

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுவிட்டன.
சாய் ஹோப் தலைமையிலான 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி நேற்று (ஜனவரி 26) அறிவிக்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இடம்பெற்ற 11 வீரர்கள், எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் நிறைய இருப்பதால் எதிர்வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிகம் வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அனுபவம் நிறைந்த வீரர்களால் நிரம்பியுள்ளது. ஷிம்ரான் ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் மற்றும் பிரண்டன் கிங் போன்ற வீரர்கள் அணியில் இருக்கிறார்கள். சாய் ஹோப் அணியைக் கேப்டனாக வழிநடத்துகிறார். டி20 போட்டிகளில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான அகீல் ஹொசைன் அணியில் இருக்கிறார். அணியில் ஜேடன் சீல்ஸ் மற்றும் ஷமர் ஜோசப் போன்ற இளம் வீரர்களும் இருக்கிறார்கள். மூத்த மற்றும் இளம் வீரர்களுடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி சமபலத்துடன் உள்ளது.
இந்திய ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு அதிகம் இருப்பதால், அது கண்டிப்பாக அவர்களுக்கு உதவியாக இருக்கும். நிறைய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறார்கள். அதனால், டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.