

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று (ஜனவரி 31) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இஷான் கிஷன் அதிரடி சதம்
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அதிரடியாக 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்கள் பறந்த வண்ணமே இருந்தது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
சூர்யகுமார் ஆட்டமிழந்ததையடுத்து, இஷான் கிஷன் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 42 பந்துகளில் சதம் விளாசி, சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 43 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும்.
ஹார்திக் பாண்டியா அதிரடியாக 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணி இந்தப் போட்டியில் 23 சிக்ஸர்களை விளாசியது.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.