இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டிக்கு மழை காரணமாக முடிவு எட்டப்படாத நிலையில், மான்செஸ்டரில் நாளை (ஜூலை 4) இரண்டாவது டி20 போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் டி20 போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற சாக்யுப் மஹ்முத் மற்றும் லூக் வுட் இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ள ஜோஷ் டங் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகவுள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் விவரம்
பில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், டாம் பாண்டன், சாம் கரண், வில் ஜாக்ஸ், லியம் டாஸன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோஷ் டங்.
Summary
The England Cricket Board has announced the playing XI for the second T20 match against India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








