இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விலகிய உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட்டுக்கு கே.கே.ஆரில் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தி அணி, டி20 தொடர்களில் விளையாடியது. அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்திய அணியின் தோல்வியால் உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரியான் டென் டோஷேட் நேற்று விலகினார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வியூகங்கள் வகுக்கும் பொறுப்பு ரியான் டென் டோஷேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Welcome home, Tendo ð𥺠pic.twitter.com/Ut7hWqMAsA
— KolkataKnightRiders (@KKRiders) July 29, 2026
2011-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த ரியான், கடந்த 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் அங்கம் வகித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக அவர் இணைந்தார்.
வீரராக மட்டுமின்றி, 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கும் பயிற்சியாளர் குழுவில் ரியான் இடம்பெற்றிருந்தார். மேலும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலகினார்.
45 வயதான ரியானின் பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை இருக்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பியதாகவும், அதனால் அவர் பதவி விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியானின் பதவிக்காலத்தில் இந்திய அணி, 2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை வென்றது. இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Ryan ten Doeschate wasted little time finding his next challenge. Just a day after leaving India's coaching staff, he returned to the Knight Riders in a newly created global leadership role.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் விலகல்?

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சூர்யவன்ஷி இடம்பெற வேண்டும்: முன்னாள் வீரர்

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக நினைக்கிறாரா மோர்னே மோர்க்கல்?
வைபவ் சூர்யவன்ஷி தயாராக இருக்கிறார், ஆனால்... பயிற்சியாளர் கூறுவதென்ன?
விடியோக்கள்

நாராயணபுரம் ஏரி தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆனந்த் நேரில் ஆய்வு | Minister N Anand |



