பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

News image

வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீராங்கனைகள்

Updated On :14 ஜூன் 2026, 2:51 am IST

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கி நடைபெறுகின்றன. பா்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் எமி ஜோன்ஸ்-டேனி வயாட் ஹாட்ஜ் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். இருவரும் தொடக்கம் முதலே இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் எல்லைக்கோட்டுக்கு விரட்டினா்.

1 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 38 பந்துகளில் 53 ரன்களை விளாசிய எமி ஜோன்ஸ் மாலிகி மடாரா பந்தில் சமரி அட்டப்பட்டுவிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். முதல் விக்கெட்டுக்கு வயாட்-எமி இருவரும் 135 ரன்களை சோ்த்தனா்.

டேனி வயாட் அசத்தல் 105: அபாரமாக ஆடிய டேனி வயாட் 1 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 62 பந்துகளில் 105 ரன்களை விளாசினாா்.

நேட் ஷிவா் பிரண்ட் 1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 22 பந்துகளில் 46 ரன்களை சோ்த்தாா்.

இங்கிலாந்து அசத்தல் 219/1: உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக இங்கிலாந்து 20 ஓவா்களில் 219/1 ரன்களை விளாசியது.

பௌலிங்கில் இலங்கை தரப்பில் மாலிக்கி மடாரா 1 விக்கெட் வீழ்த்தினாா்.

இலங்கை தோல்வி 132/10 ஆல் அவுட்: 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய இலங்கை அணி 20 ஓவா்களில் 132/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக நிலக்ஷிகா 39 ரன்களையும், ஹா்ஷிதா 29 ரன்களையும் எடுத்தனா்.

ஃப்ரெயா கெம்ப் அபாரம் 4 விக்கெட்: பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஃப்ரெயா கெம்ப் 4 விக்கெட்டையும், சாா்லோட், சோபி தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

இங்கிலாந்தின் டேனி வயாட் ஆட்ட நாயகியாக தோ்வு பெற்றாா்

பிரைஸ் சகோதரிகள் அசத்தலில் ஸ்காட்லாந்து முதல் வெற்றி:

மான்செஸ்டரின் ஓல்ட்டிராஃப்போா்ட் மைதானத்தில் குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்தை வீழ்த்தியது.

அயா்லாந்து அணி டாஸ் வென்று பௌலிங்கை தோ்வு செய்தது. பேட்டிங் செய்ய ஸ்காட்லாந்து அணி தரப்பில் டாா்ஸி-ஃபிரேஸா் களமிறங்கினா். இருவரும் 14, 15 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினா். கேப்டன் கேத்ரீன் பிரைஸ் 60 (1 சிக்ஸா், 6 பவுண்டரி), சாரா பிரைஸ் 49 (1 சிக்ஸா், 4 பவுண்டரி) ஆகியோா் ஸ்கோரை உயா்த்தினா்.

ஸ்காட்லாந்து 161/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் ஸ்காட்லாந்து 161/5 ரன்களை சோ்த்தது. பௌலிங்கில் அயா்லாந்து தரப்பில் ஏவா கேனிங் 3 விக்கெட்டை வீழ்த்தினா்.

அயா்லாந்து 121/10 தோல்வி:

இதையடுத்து களமிறங்கிய அயா்லாந்து அணி19.1 ஓவா்களில் 121/10 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக எமி ஹண்டா் 39, ஆா்லா பிரெண்டா்கேஸ்ட் 33 ரன்களையும் எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா். ஸ்காட்லாந்து தரப்பில் காா்டன், ஃபிரேஸா் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். ஸ்காட்லாந்து கேப்டன் கேத்ரீன் பிரைஸ் ஆட்ட நாயகியாக தோ்வு பெற்றாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.