டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பிரிஸ்டாலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குல் ஃபெரோஷா அதிகபட்சமாக அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 52 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஆயிஷா ஜாஃபர் 32 ரன்களும், முனீபா அலி 12 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
நெதர்லாந்து தரப்பில் ஐரிஸ் ஸ்விலிங் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹீதர் சிகர்ஸ், ஹன்னா லந்தீர், கரோலின் மற்றும் சில்வர் சிகர்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the T20 World Cup match against the Netherlands, the Pakistan team scored 126 runs for the loss of 6 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸி.!







