விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

தொடக்க ஆட்டக்காரர்கள் கோல்டன் டக்; அயர்லாந்து அபார பந்துவீச்சு!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

News image
Updated On :28 ஜூன் 2026, 9:58 pm IST

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இந்தியா - அயர்லாந்து இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் கோல்டன் டக்!

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 12 ரன்கள், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 10 ரன்கள் மற்றும் அக்‌ஷர் படேல் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அயர்லாந்து வீரர் ஜெய் மூந்த்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

Summary

In the second T20 match against Ireland, both Indian openers were dismissed for golden ducks, causing a shock.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.