தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 118 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது.

News image

படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :28 ஜூன் 2026, 5:45 pm IST

டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேசம் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லண்டன் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷோபனா மொஸ்டாரி 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன்கள், ஷர்மின் அக்தர் 22 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா தரப்பில் நான்குலுலேகோ மிலாபா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாரிஸேன் காப், ஷப்னிம் இஸ்மாயில் மற்றும் நடின் டி கிளர்க் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

Summary

Batting first in the T20 World Cup match against South Africa, Bangladesh scored 117 runs for the loss of 5 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.