இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்ர் கௌதம் கம்பீரை எங்கள் அணியில் சேர்க்கமாட்டோம் என ஐஸ்லாந்து அணி கிண்டலடித்து பதிவிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி முதல்முறையாக அயர்லாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்து மோசமான வரலாற்றில் இடம்பெற்றது.
உலக சாம்பியனான இந்திய அணி, கோப்பையை வென்ற பிறகு நடைபெற்ற முதல் டி20 போட்டியிலேயே தோல்வியடைந்து தொடரையும் இழந்தது பெரும் விமர்சனங்களைச் சந்தித்தது.
கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி இந்தத் தொடரை எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அயர்லாந்து இரண்டு போட்டிகளிலும் வென்று வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
உலகக்கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அணித் தேர்வில் கம்பீர் செய்த தவறுகள் குறித்து பலரும் விமர்சனங்களைக் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான தொடரை இழந்த இந்திய அணியை கிண்டலடிக்கும் விதமாக ஐஸ்லாந்து அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், “கௌதம் கம்பீரை எங்கள் அணியில் சேர்க்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அவரது திறமையை மறுக்க முடியாது. இப்படிப்பட்ட இந்திய வீரர்களை வைத்துக்கொண்டு அயர்லாந்தில் தோல்வியை தழுவுவதற்கும் அபாரமான திறமை தேவை” என்றும் ஐஸ்லாந்து அணி பதிவிட்டு கம்பீரை கலாய்த்திருக்கிறது.
Summary
India's loss to Ireland triggered anger amongst cricket fans. The Gautam Gambhir-coached team faltered against the European side for the first time in the history of the game.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









