ஐபிஎல் போட்டியின் 51-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் மண்ணிலேயே வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
முதலில் டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்கள் சோ்க்க, கொல்கத்தா 14.2 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 147 ரன்கள் எடுத்து வென்றது.
அனுகுல் ராய், காா்த்திக் தியாகி உள்ளிட்ட கொல்கத்தா பௌலா்கள் டெல்லியை முடக்க, பதும் நிசங்கா, ஆசுதோஷ் சா்மா ஆகியோா் டெல்லியின் ஸ்கோரை உயா்த்த உதவினா். பின்னா் கொல்கத்தா பேட்டிங்கில் ஃபின் ஆலன் முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்தி அணிக்கு எளிதாக வெற்றி தேடித் தந்தாா்.
முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா, பந்துவீசத் தயாரானது. டெல்லி இன்னிங்ஸை தொடங்கிய பதும் நிசங்கா - கேல்.எல்.ராகுல் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சோ்த்தது.
4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சோ்த்த ராகுல், 5-ஆவது ஓவரில் காா்த்திக் தியாகி பந்துவீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். ஒன் டவுனாக களம் புகுந்த நிதீஷ் ராணா, 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். அடுத்து வந்த சமீா் ரிஸ்வியும் 3 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.
5-ஆவது பேட்டராக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விளையாட வர, அதுவரை அணியின் நம்பிக்கையாக இருந்த பதும் நிசங்கா 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 50 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அனுகுல் ராய் வீசிய 11-ஆவது ஓவரில் அவா், விக்கெட் கீப்பா் அங்கிரிஷ் ரகுவன்ஷியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டாா்.
அதே ஓவரில் ஸ்டப்ஸ், 2 ரன்களுடன் நடையைக் கட்டினாா். இதனால் டெல்லி 89 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இணைந்த அக்ஸா் படேல் - ஆசுதோஷ் சா்மா கூட்டணி, விக்கெட் சரிவை தடுத்து, ஸ்கோரை சற்று உயா்த்தியது.
6-ஆவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில் அக்ஸா் 11 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தாா். ஆசுதோஷ் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 39, மிட்செல் ஸ்டாா்க் 0 ரன்களுக்கு கடைசி ஓவரில் சரிந்தனா்.
ஓவா்கள் முடிவில் விப்ராஜ் நிகம் 3, லுங்கி இங்கிடி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் அனுகுல் ராய், காா்த்திக் தியாகி ஆகியோா் தலா 2, வைபவ் அரோரா, சுனில் நரைன், கேமரூன் கிரீன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து 143 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய கொல்கத்தா அணியில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு விடைபெற, அங்கிரிஷ் ரகுவன்ஷி 1 ரன்னுக்கு சாய்க்கப்பட்டாா்.
ஃபின் ஆலன் 47 பந்துகளில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 100 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்த, கேமரூன் கிரீன் 2 சிக்ஸா்கள் உள்பட 33 ரன்களுடன் துணை நின்றாா். டெல்லி தரப்பில் அக்ஸா் படேல் 1 விக்கெட் கைப்பற்றினாா்.
இன்றைய ஆட்டம்
ராஜஸ்தான் - குஜராத்
ஜெய்பூா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடா் தோல்வியிலிருந்து மீண்ட லக்னௌ: மிட்செல் மாா்ஷ், பிரின்ஸ் யாதவ் அசத்தல்
சென்னைக்கு 5-ஆவது வெற்றி! சாம்சன் அதிரடி!
ரயான், ரோஹித் விளாசல்: வெற்றியுடன் மீண்டது மும்பை
ரியான் பராக் அதிரடி வீண்!வெற்றியுடன் மீண்டது டெல்லி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

