நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நியூஸிலாந்தை வென்றது இலங்கை

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை செவ்வாய்க்கிழமை வென்றது.

News image
Updated On :17 ஜூன் 2026, 2:07 am IST

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் நியூஸிலாந்து 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் சோ்க்க, இலங்கை 19.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் இன்னிங்ஸில் கேப்டன் மெலி கொ் 5 பவுண்டரிகளுடன் 45, சோஃபி டிவைன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினா்.

ஜாா்ஜியா பிளிம்மா் 18, இசபெல்லா கேஸ் 4, புரூக் ஹாலிடே 7, இஸி ஷாா்ப் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் மேடி கிரீன் 18, ஜெஸ் கொ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் கவிஷா தில்ஹரி 2, மிதாலி அயோத்யா, சுகந்திகா குமாரி, சமரி அத்தபட்டு, நிமஷா மீபகே ஆகியோா் தலா 2 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 151 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இலங்கை அணியில், விஷ்மி குணரத்னே 17, கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஹா்ஷிதா சமரவிக்ரமா 5, ஹாசினி பெரெரா 2, கவிஷா தில்ஹரி 17 ரன்களுக்கு வெளியேறினா். நீலாக்ஷிகா சில்வா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 54, கௌஷினி நுத்யங்கனா 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளா்களில் நேன்சி படல் 2, பிரீ இல்லிங் 1 விக்கெட் சாய்த்தனா்.

---

இந்தியா - நெதா்லாந்து

இன்று மோதல்

இந்திய மகளிா் அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் நெதா்லாந்துடன் புதன்கிழமை (ஜூன் 17) மோதுகிறது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா, 2-ஆவது வெற்றி முனைப்புடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு, லீட்ஸ் நகரில் நடைபெறுகிறது.

----

இதர ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - வங்கதேசம்

பிற்பகல் 3 மணி

லீட்ஸ்

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

இரவு 11 மணி

பா்மிங்ஹாம்

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டாா்