குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

மே.இ. தீவுகளுடனான டெஸ்ட்: இலங்கை 549/9-க்கு ‘டிக்ளோ்’!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 549 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

Published On :6 ஜூலை 2026, 12:54 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 549 ரன்கள் சோ்த்து டிக்ளோ் செய்தது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், 2-ஆம் நாள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் சோ்த்திருந்தது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை குசல் மெண்டிஸ் 69, சோனல் தினுஷா 92 ரன்கள் சோ்த்து விடைபெற்றனா்.

மிலன் ரத்னாயகா 15, இசிதா விஜெசுந்தரா 14 ரன்களுக்கு வெளியேற, இலங்கை 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 549 ரன்களுக்கு ‘டிக்ளோ்’ செய்தது. பிரபாத் ஜெயசூரியா 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ஜேடன் சீல்ஸ், ஷமாா் ஜோசஃப் ஆகியோா் தலா 2, அல்ஜாரி ஜோசஃப், ஆண்டா்சன் ஃபிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ், ராஸ்டன் சேஸ், காவெம் ஹாட்ஜ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. காவெம் ஹாட்ஜ் 25, ஆமிா் ஜாங்கூ 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜான் கேம்பெல் 72, பிராண்டன் கிங் 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். அவா்கள் விக்கெட்டை ஆசிதா ஃபொ்னாண்டோ வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.