மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை செவ்வாய்க்கிழமை வென்று, முதல் அணியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் சேர்க்க, ஆஸ்திரேலியா 13 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் 5 பவுண்டரிகளுடன் 30, ஷிமெய்ன் கேம்பெல் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
கியானா ஜோசஃப் 1 சிக்ஸருடன் 16, ஸ்டெஃபானி டெய்லர் 0, ஜாஸரா கிளாக்ஸ்டன் 0, ஷினெல் ஹென்றி 1 பவுண்டரியுடன் 10, ஜெனிலியா கிளாஸ்கோ 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
ஓவர்கள் முடிவில் டீண்ட்ரா டாட்டின் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பெüலர்களில் சோஃபி மாலினுக்ஸ், ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2, அனபெல் சதர்லேண்ட் 1 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் ஆஸ்திரேலிய இன்னிங்ஸில், ஜார்ஜியா வோல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16, எலிஸ் பெரி 2 ரன்களுடன் சாய்க்கப்பட்டனர்.
பெத் மூனி 8 பவுண்டரிகளுடன் 61, ஆஷ்லே கார்ட்னர் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 35 ரன்கள் சேர்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷினெல் ஹென்றி, ஹேலி மேத்யூஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இலங்கையுடனான டெஸ்ட்: மே. தீவுகளுக்கு இன்னிங்ஸ் வெற்றி

நியூஸிலாந்தை வென்றது இலங்கை
ஹோல்டர் ஆட்ட நாயகன்: இலங்கையை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரை வென்றது இங்கிலாந்து
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



