தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 ஓவர்கள் முழுவதுமாக வீசத் தயாராக இருப்பதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

News image

கேமரூன் கிரீன் - படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)

Updated On :1 மணி நேரம் முன்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 ஓவர்கள் முழுவதுமாக வீசத் தயாராக இருப்பதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

ஐபில் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. தொடரின் ஆரம்பத்தில் தோல்விகளால் திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், ஆரம்பக் கட்டப் போட்டிகளில் அவர் பந்துவீச்சில் ஈடுபடாதது பேசுபொருளானது. கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஈடுபடாதது குறித்த கேள்விக்கு அதனை நீங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம்தான் கேட்க வேண்டும் என கேப்டன் அஜிங்க்யா ரஹானே பதிலளித்திருந்தார். அதன் பின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது, கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஈடுபட்டது எனப் பல நிகழ்வுகள் அரங்கேறின.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 ஓவர்கள் முழுவதும் வீசவும், எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடவும் 100 சதவிகிதம் தயாராக இருப்பதாகவும் கேமரூன் கிரீன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: 4 ஓவர்கள் முழுமையாக வீசுவதற்கு நான் 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன். அணிக்காக அனுகுல் ராய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசுகிறார். அதனால், என்னால் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மட்டுமே வீச முடிகிறது.

நானும் அனுகுல் ராயும் அணியில் ஆல்ரவுண்டர்களாக இருக்கிறோம். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து அணிக்காக நான்கு ஓவர்கள் வீசுகிறோம். எங்கள் அணியின் பேட்டிங் காம்பினேஷனை கண்டறிய சில போட்டிகள் ஆகிவிட்டது. அணிக்காக எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயாராக இருக்கிறேன். இப்போது அணி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Cameron Green has stated that he is ready to bowl his full quota of four overs for the Kolkata Knight Riders.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.