சிஎஸ்கேவின் பிளே - ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் பஞ்சாப் - ஆர்சிபி போட்டி!

சிஎஸ்கேவின் பிளே - ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் போட்டி குறித்து...

The captains of the RCB and Punjab teams.

ஆர்சிபி, பஞ்சாப் அணியின் கேப்டன்கள். - படங்கள்: எக்ஸ் / ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ்.

Published On :17 மே 2026, 12:09 pm IST

சிஎஸ்கேவின் பிளே - ஆஃப் வாய்ப்பைத் தீர்மானிக்கும் போட்டியில் இன்று (மே.17) மதியம் 3.30 மணிக்கு பஞ்சாப் அணியும் ஆர்சிபி அணியும் தர்மசாலாவில் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் ஆர்சிபி வென்று, பஞ்சாப் அணி தோல்வியுற்றால் சிஎஸ்கே அணிக்கு ரன் ரேட் பிரச்னையின்றி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே போதுமென்ற நிலை உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.

சிஎஸ்கே 12 புள்ளிகளுடனும் பஞ்சாப் 13 புள்ளிகளுடனும் இருக்கின்றன. ஆர்சிபி 16 புள்ளிகளுடன் இருக்கின்றன. பஞ்சாப் இந்தப் போட்டியில் தோற்றால் 13 புள்ளிகளுடனே இருக்கும். மீதமிருக்கும் ஒரு போட்டியில் வென்றாலுமே பஞ்சாப் அணியினால் அதிகபட்சமாக 15 புள்ளிகள் வரைக்குமே செல்ல முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

சிஎஸ்கே மீதமிருக்கும் 2 போட்டிகளில் வென்றால் அதிகபட்சமாக 16 புள்ளிகள் வரைக்கும் செல்லும். இதனால், ரன் ரேட்டை பார்க்க வேண்டியதில்லை. ஒருவேளை பஞ்சாப் வென்றால், பல அணிகள் 16 புள்ளிகளில் வரும், அப்போது ரன் ரேட் மிகப்பெரிய ஆயுதமாக மாறுமென்பது குறிப்பிடத்தக்க்கது.

நேற்றைய போட்டியிலும் குஜராத் தோல்வியுற்று சிஎஸ்கே அணிக்கு உதவியிருக்கிறது. குஜராத்தின் கடைசி போட்டியில் சிஎஸ்கே உடன் மோதுகிறது. இதில் சிஎஸ்கே வென்றால் குஜராத்தின் பிளே ஆஃப் வாய்ப்பு ரன் ரேட் அடிப்படையிலேயே அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2026: புள்ளிப் பட்டியல்

1. ஆர்சிபி - 16 புள்ளிகள் (மீதம் 2 போட்டிகள்)

2. குஜராத் - 16 புள்ளிகள் (மீதம் 1 போட்டி)

3. சன்ரைசர்ஸ் - 14 புள்ளிகள் (மீதம் 2 போட்டிகள்)

4. பஞ்சாப் - 13 புள்ளிகள் (மீதம் 2 போட்டிகள்)

5. ராஜஸ்தான் - 12 புள்ளிகள் (மீதம் 3 போட்டிகள்)

6. சிஎஸ்கே - 12 புள்ளிகள் (மீதம் 2 போட்டிகள்)

7. கேகேஆர் - 11 புள்ளிகள் (மீதம் 2 போட்டிகள்)

Summary

Pbks vs rcb could decide chennai super kings ipl 2026 playoff fate decided

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.