உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ. 94.20 ஆக நிறைவு!பணவீக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 319 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,150-க்கு கீழ் நிறைவு!மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானைத் தொடர்ந்து மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்த இந்தியா!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்திய அணி மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.

படம் | AP

Updated On :

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானைத் தொடர்ந்து இந்திய அணி மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பே ஓவலில் இன்று (நவம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மாட் ஹென்றி ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மூவரையும் டக் அவுட்டாக்கி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார். அதன் பின், இந்திய அணி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமான தோல்வியைத் தழுவியது.

மோசமான சாதனைப் பட்டியலில் இந்திய அணி!

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆட்டத்தின் முதல் ஓவரில் ரன் கணக்கைத் தொடங்காமல் 3 விக்கெட்டுகளை இழந்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் ரன் கணக்கைத் தொடங்காமல் மூன்று விக்கெட்டுகளை இழந்த இரண்டாவது அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த 1997 ஆம் ஆண்டு லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷான் பொல்லக் ஆட்டத்தின் முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேபோல, கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் ஆட்டத்தின் முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை இழப்பது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா இரண்டு அணிகளும் ரன் கணக்கைத் தொடங்காமல் மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில், வங்கதேச அணி ரன் கணக்கைத் தொடங்கி 4 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

India has joined Pakistan on the list of teams with the worst records in the history of one-day cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.