எப்போதும் பெருமை கொள்வேன் மஹி: தோனியின் ஓய்வு குறித்து சாக்‌ஷி!

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்ததாவது...

MS Dhoni | Sakshi

மனைவி சாக்‌ஷியுடன் எம்.எஸ். தோனி - கோப்புப் படம்

Updated On :

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து அவரது மனைவி சாக்‌ஷி, “எப்போதும் பெருமை கொள்வேன் மஹி” எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றதாக இன்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தோனியின் மனைவியான சாக்‌ஷி தெரிவித்திருப்பதாவது:

சில அழகான அத்தியாயங்களைத் தொடங்க வேண்டுமென்றால், சில அத்தியாயங்களை முடித்தாக வேண்டும்.

பல ஆண்டுகளாக உங்களை எங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்திருந்தாலும் சரி, தெரியாவிட்டாலும் சரி, மஹியை நேசித்து, ஆதரித்து, நம்பிய அனைவருக்கும் எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி.

இந்த அன்புக்கு நாங்கள் என்றென்றும் கடன்பட்டுள்ளோம்.

புதிய தொடக்கங்கள், புதிய பயணங்கள் மற்றும் இன்னும் பல அழகான நினைவுகளுக்காக எப்போதும் உங்களை நினைத்து பெருமை கொள்வேன் மஹி என்று சாக்‌ஷி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Regarding Mahendra Singh Dhoni’s retirement, his wife Sakshi posted, “I will always be proud, Mahi.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.