சூர்யவன்ஷி விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் பெரும் தவறு செய்கிறது: முன்னாள் கேப்டன்
வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் பெரும் தவறு செய்து கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் பெரும் தவறு செய்து கொண்டிருப்பதாக முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அண்மையில் இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்திய அணியில் அறிமுகமாகிவிட்டாலும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. டி20 கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வருவதால், சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்காமல் இந்திய அணி நிர்வாகம் பெரும் தவறு செய்து கொண்டிருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அணி நிர்வாகம் வைபவ் சூர்யவன்ஷி விஷயத்தில் நடந்துகொள்வது சரி கிடையாது. வைபவ் சூர்யவன்ஷியை அவர்கள் ஊக்கப்படுத்தவில்லை. அவரது தன்னம்பிக்கையை உடைக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள். சூர்யவன்ஷி விஷயத்தில் இவர்கள் அனைவரும் மிகப் பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுத்துவிட்டு, ஐந்து போட்டிகளில் அவரை விளையாட வைப்பதில்லை. இப்படி செய்வது சரி கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைத்தால், உலகம் முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் புத்துயிர் பெறும். நியூசிலாந்தில் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் திரண்டு வருகிறார்கள். அவர் எங்கு சென்றாலும் அவரது அதிரடியான ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள். அவர் நன்றாக விளையாடுகிறார். அவருக்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும். சூர்யவன்ஷிக்கு தொடர்ச்சியாக 20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுங்கள். அவர் உங்களுக்காக 5-லிருந்து 7 ஆட்டங்களை தனி நபராக வென்று கொடுப்பார் என்றார்.
Summary
Former captain Krishnamachari Srikkanth has stated that the Indian team management is making a major mistake by not providing consistent opportunities to Vaibhav Suryavanshi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


