மூன்றாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைப்பதே எங்களது நோக்கம்: ஆர்சிபி பயிற்சியாளர்
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைப்பதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நோக்கம் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ஆர்சிபி வீரர்கள் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைப்பதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நோக்கம் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ளது. மினி ஏலத்துக்கு முன்பாக அணிகள் வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் வந்தன. மேலும், அணிகள் தங்களுக்குள் வீரர்களை டிரேடிங் மூலமும் பரிமாறிக் கொண்டனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிறைய வீரர்களை விடுவிக்கவில்லை. ஆர்சிபியிலிருந்து வெறும் 5 வீரர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். அதிலும், ஜேக்கப் பெத்தேல் காயம் காரணமாக விடுவிக்கப்பட்டார். சாம்பியன் பட்டம் வென்ற அணியுடனேயே ஆர்சிபி களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைப்பதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நோக்கம் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எங்களுக்கு கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களும் மிகவும் சிறப்பானதாக அமைந்தன. எங்களிடம் தற்போதுள்ள அணியுடனேயே அடுத்த சீசனில் களமிறங்கும் அளவுக்கு மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளோம். எங்களிடம் வலுவான அணி உள்ளது. நாங்கள் குறைவான வீரர்களையே விடுவித்துள்ளோம். ஏலத்தில் அணியை மேலும் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.
ஐபிஎல் மினி ஏலத்தில் மற்ற அணிகளைக் காட்டிலும் எங்களிடம் தொகை மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால், அந்தத் தொகை எங்களுக்கு போதுமானதாக இருக்கும். ஏனெனில், எங்களிடம் கடந்த இரண்டு சீசன்களாக சிறப்பாக செயல்பட்ட அணி உள்ளது. அடுத்த சீசனிலும் அந்த அணி சிறப்பாக செயல்படும். அடுத்த சீசன் எங்களுக்கு மிகவும் முக்கியமான சீசன். அடுத்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்று எங்களால் வரலாறு படைக்க முடியும் என்றார்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் எந்தவொரு அணியும் தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The head coach of the Royal Challengers Bengaluru team has stated that their goal is to create history by winning the IPL championship title for the third consecutive time.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


