மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் மூத்த வங்கதேச வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

Mushfiqur Rahim

முஷ்பிகர் ரஹீம் - படம் | AP

Updated On :

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகர் ரஹீம் ஓய்வு பெறவுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார்.

39 வயதாகும் முஷ்பிகர் ரஹீம் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார். இதுவரை வங்கதேச அணிக்காக 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7062 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 14 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணிக்காக அதிக ரன்கள் குவித்துள்ள வீரர் என்ற பெருமை இவரைச் சேரும்.

இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமிம் இக்பால் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு முஷ்பிகர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். அவரது இந்த முடிவை சில நாள்களுக்கு முன்பாக என்னிடம் கூறினார். அதன் பின், அவரிடம் தொடர்ந்து பேசினேன். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உங்களது முடிவை நீங்களே தெரிவியுங்கள் என்றேன். ஆனால், முஷ்பிகர் ரஹீம் என்னை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டதால் அவரது ஓய்வு முடிவை நான் அறிவிக்கிறேன் என்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக முதல் முறையாக ரஹீம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். விக்கெட் கீப்பர் பேட்டரான அவர் டெஸ்ட் போட்டிகளில் அணியை பல்வேறு உயரங்களுக்கு எடுத்துச் சென்றார். அவரது தலைமையிலான வங்கதேச அணி, முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு முஷ்பிகர் ரஹீம் வங்கதேச அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 சதங்களுடன் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பெருமையையும் தன்வசம் வைத்துள்ளார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் வங்கதேச அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரஹீம். அந்தப் போட்டியில் அவர் சதம் விளாசி அசத்தினார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களைக் கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையை முஷ்பிகர் ரஹீம் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Senior Bangladesh player Mushfiqur Rahim is set to retire from international cricket following the Test series against England.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.