இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்!!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?

முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தாத பும்ரா; ஆதரவாக பேசிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தாதது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பேசியுள்ளார்.

Jasprit Bumrah

ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP

Updated On :

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தாதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே பேசியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று (நவம்பர் 27) தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் பிளண்டெல் 89 ரன்களும், கேப்டன் டாம் லாதம் 59 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குர்னூர் பிரார் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். மூத்த வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தவில்லை.

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் வீழ்த்தாதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பஹுதுலே பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் என்பதை நான் உணர்கிறேன். இந்திய அணிக்காக பல போட்டிகளை அவர் வென்று கொடுத்துள்ளார். அவருடைய பந்துவீச்சு மிகவும் நன்றாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் விக்கெட் வீழ்த்துவார். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் பந்துவீசுகிறார். அதன் காரணமாக அவரது பந்துவீச்சு வேகம் மெதுவாக உள்ளது. அணியில் உள்ள இளம் வீரர்களின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இளம் வீரர்கள் அவரிமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள் என்றார்.

இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்கள் வீசிய ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 49 ரன்கள் விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The Indian team's bowling coach has spoken about Jasprit Bumrah failing to take a wicket in the first innings of the second Test against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.