தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தனஞ்சய டி சில்வா!

இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியது குறித்து...

Dhananjaya de Silva

தனஞ்சய டி சில்வா - படம்: எக்ஸ் / ஐசிசி

Published On :8 அக்டோபர் 2026, 12:52 pm IST

இலங்கை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தனஞ்சய டி சில்வா (35 வயது) விலகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐசிசி உறுதி செய்துள்ளது.

கடந்த ஜன. 2024ல் இலங்கை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டார். தற்போது இரண்டாண்டுகளில் தனது பதவியை துறந்துள்ளார்.

மொத்தமாக 18 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற தனஞ்சய டி சில்வா 7 போட்டிகளில் வென்றுள்ளார். 8 போட்டிகளிலும் தோல்வியும் 3 போட்டிகளில் சமனிலும் முடித்துள்ளார்.

கேப்டனாக இருக்கும்போது தனஞ்சய டி சில்வா 1,130 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 36.45ஆக இருந்தது. பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார்.

கடைசியாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் 0-1 என இலங்கை தோல்வியுற்றது. இந்த நிலையில், தனஞ்சய டி சில்வா கூறியிருப்பதாவது:

அடுத்த தலைமுறையிடம் கேப்டன் பொறுப்பு செல்ல வேண்டுமென உண்மையாகவே விரும்புகிறேன். தொடர்ந்து வீரராக விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியமும் இவரது சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளது. அடுத்ததாக பாகிஸ்தானுடன் இலங்கை கிரிக்கெட் அணி டி20 தொடரில் நாளை (அக்.9) மோதவிருக்கிறது.

Summary

Sri Lanka’s Test captain, Dhananjaya de Silva, has decided to step down from the captaincy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.