சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

முதல் ஒருநாள்: நமீபியாவை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!

நமீபியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படம் | அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Updated On :

நமீபியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 22) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.

பால் ஸ்டிரிலிங் அரைசதம்!

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பால் ஸ்டிரிலிங் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 71 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேட் கார்மைக்கேல் 45 ரன்கள், ஹாரி டெக்டார் மற்றும் லோர்கான் டக்கர் தலா 28 ரன்கள், ஆண்ட்ரூ பல்பிர்னி 20 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை.

நமீபியா தரப்பில் ஜேன் நிக்கோல் லாஃப்டி ஈட்டன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேஜே ஸ்மித் இரண்டு விக்கெட்டுகளையும், ரூபன், பெர்னார்டு மற்றும் ஜாக் பிராஸ்ஸல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து அபார வெற்றி!

230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா 37.5 ஓவர்கள் முடிவில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம், அயர்லாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நமீபியா அணியில் அதிகபட்சமாக ரூபன் 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். லோரன் ஸ்டீன்கேம்ப் 26 ரன்கள், மைக்கேல் வான் 23 ரன்கள் எடுத்தனர். கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் 22 ரன்கள் எடுத்தார்.

அயர்லாந்து தரப்பில் கேவின் ஹோ 3 விக்கெட்டுகளையும், ஜெய் மூந்த்ரா மற்றும் ஜார்ஜ் டாக்ரெல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். லியம் மெக்கார்த்தி மற்றும் கர்டிஸ் கேம்பர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

Ireland won the first ODI against Namibia by a huge margin of 55 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.